Sunday, 19 February 2012

நானும் என் ஆசிரியை கல்கியும்

வணக்கம்.
                   
                         எனக்கு சகோதரி அமைப்பின் நிறுவனர் செல்வி திருநங்கை. கல்கி சுப்ரமணியம் அவர்களை கடந்த 4 வருடங்களாக நட்ப்பு பாரட்டிவந்துள்ளேன்..........அவர்கள் எனக்கும்  மற்று்ம் எங்களின் திருநங்கைளின் திறமைகளை கண்டறிந்து அவர்களுக்கு இயல், இசை, நாடகம் போன்ற பயிற்சிகளை அளித்து முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கின்றார்.


அதில் எனக்கு வலைபூ எப்படி  உருவாக்குவது என்ற பயிற்சியை எனக்கு அளித்தார்............... அப்பயிற்சியின் போது கற்றுகொண்டு உருவாக்கிய வலைபூ தான் ''பிரியா ஆகிய நான்'' இவ்வலைபூவை உருவாக்க கற்று கொடுத்த என் சகதோழி, என் சகோதரி.செல்வி திருநங்கை. கல்கி சுப்ரமணியம் அவர்களுக்கு மிகவும் நன்றி............ இவருடைய சமூக பணி தொடர வாழ்த்துக்கள் மற்றும் இறைவனை பிராத்திப்போம் ...............................நன்றி.

Saturday, 18 February 2012

என்னை பற்றி ஒரு அறிமுகம்

என் பெயர் பிரியா மிர்ஸா. நான் மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டு உள்ளேன். என் புகைப்படங்களை விரைவில் இங்கே வெளியிடுவேன். நான் திரைப்படங்களில் நடிக்கிறேன் , நடிக்கவும் ஆர்வம் கொண்டுள்ளேன்,

தமிழில் பெரிய வெற்றி பெற்ற காஞ்சனா திரைபடத்தில் நான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளேன், அந்த படத்தில் நான் சரத்குமாருக்கு மகளாக நடித்துள்ளேன், இந்த திரைப்படம் தெலுங்கிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு பெரும் வெற்றி பெற்றது.............................


காஞ்சனாவை தொடர்ந்து எனக்கு மிக நல்ல பெயர், புகழ் கிடைத்தது, தொடந்து நிறைய படங்களில் நடிப்போம் என்ற கனவும், நிறைய வாய்ப்புகள் வரும் என்ற எதிர்பார்ப்பும் எனக்கு இருந்தது, எனினும் எனக்கு ஒரு சோகம் நடந்தது, அது என்னவென்றால் பெரிய விபத்து ஒன்று நேர்ந்தது அந்த விபத்தில் எனது வலது காலில் அறுவை சிகிச்சை நடந்தது, அந்த விபத்தினால் 4 மாதங்கள் படுத்த படுக்கையாய் இருந்தேன்.அதனால் காஞ்சனா திரைப்படத்தை தொடர்ந்து வந்த வாய்ப்பு பிற படங்களில் தொடர்ந்து நடிக்க முடியவில்லை,

ஒரு புகழுக்கு பிறகு ஒரு பெரிய சறுக்கல் என்பது மிக பெரிய  வேதனை,ஆனாலும் என் முயற்சியை கைவிடாமல் என்னுடைய உடல் சரி இல்லாத நிலைமையிலும் முயற்சிகளை தொடர்ந்தேன், அம்முயற்சியின் மத்தியில் என்னுடைய அப்பா நவம்பர் 11.11.11 அன்று தற்கொலை செய்து கொண்டார், அந்த சறுக்களிலும் படாத வேதனையை நான் அவரின் இழப்பில் ஒடிந்து போனேன், பிறகு என்னுடைய அம்மாவை எப்படி காப்பாற்றுவேன் என்ற பயம் வந்தது,இதற்க்கு  நடுவில் காலமான என் அப்பாவின் முகத்தை சரியாக பார்க்க முடியாத சூழ்நிலை,என்னை ஏற்காத சிற்றப்பா,சித்தி, மற்றும் என் உறவினர்கள் என்னுடைய அப்பாவின் சவத்தினிடம் கூட சரியாக நிற்க விடவில்லை,அந்நிலையிலும் போராடினேன்,என்னுடைய அப்பாவின் ஈம சடங்கை கூட சரியாக செய்ய முடியவில்லை....................... இதற்க்கு மேல் நான் இதை பற்றி கூறினால் நான் சோக கடலில் ஆழ்ந்து விடுவேன் 

இப்படத்திற்கு பிறகும், அப்பாவின் இழப்பிற்கு பிறகும் வந்த ஒரே ஒரு வாய்ப்பு கன்னட திரைப்படம் கல்பனா, காஞ்சனா திரைப்படம் மொழி மாற்றம் செய்ய பட்டு கன்னட மொழியில் உபேந்திரா மற்றும் சாய்குமார் நடிக்கும்  படத்தில் சாய்குமார் அவர்களுக்கு மகளாக நடித்தேன்................. இப்படத்தில் 3 நாட்கள் நடித்தேன் எனக்கு காஞ்சனா திரைப்படத்தில் என்ன மரியாதை கிடைத்ததோ அதே போல் மதிப்பும் மரியாதையும் கொடுத்தனர்,

எனக்கு  திரைப்பட உலகில் நல்லதொரு வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுத்து சமுதாயத்தில் நல்ல மதிப்பும், மரியாதையும் கொடுக்க செய்து, தமிழ், தெலுகு மற்றும் கன்னட திரை உலகிலும்,மக்களிடத்திலும் ஆதரவும், நம்பிக்கை, புகழ் ஏற்படுத்தி தந்த ''ராகவா லாரன்ஸ்'' அவர்களுக்கு என்னுடைய மற்றும் என்னுடைய சமுதாயத்தின் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

என் குடும்பத்தில் இத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் இப்படத்தில் நடித்ததின் மூலம் என் வீட்டில் ஒரு விதமான மதிப்பும், மரியாதையும் ஏற்ப்பட்டுள்ளது, இவ்விதமான என்னுடைய குடும்பத்தின் மாற்றத்திற்காகவும் ''ராகவா லாரன்ஸ் மாஸ்டர்'' அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்................................நன்றி நன்றி